இலங்கை – சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் இறுதியான இருபதுக்கு–20 கிரிக்கெட் போட்டி இன்று (7) ஹராரேயில் நடைபெறுகிறது.
இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு தொடங்கவுள்ள இந்தப் போட்டி, தொடரின் தீர்மானம் மிக்க போட்டி எனக் கருதப்படுகிறது.
முந்தைய இரண்டு ஆட்டங்களில் இலங்கை மற்றும் சிம்பாப்வே தலா ஒரு வெற்றி பெற்றுள்ளதால், தொடர் தற்போது 1–1 என்ற நிலையில் சமமாக உள்ளது. எனவே, இன்று நடைபெறும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பைப் பெறுகிறது.