(ஓட்டமாவடி செய்தியாளர்)
ஓட்டமாவடி அமீர் அலி விளையாட்டரங்கின் முன்புற பஸ் நிறுத்தம் அருகில் இன்று(07.09.2025) இரவு விபத்து ஒன்று ஏற்பட்டது.
வேகக் கட்டுப்பாட்டை மீறி சென்றதாகக் கூறப்படும் Bolero வாகனம், அங்கு சென்றுகொண்டிருந்த ஆட்டோவுடனும் அங்கிருந்த மரத்திலும் மோதியுள்ளது.
இந்தச் சம்பவத்தில் ஒருவர் சிறிய காயங்களுடன் பாதிக்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.