Top News
| பொத்துவில் அபிவிருத்திக்கான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது | | புத்தளம் முதல் பொத்துவில் வரை கடல் கொந்தளிப்பு – சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு! | | இலங்கை தேசிய கபடி அணியில் இடம் பிடித்து நிந்தவூர் அல் அஷ்ரக் மாணவர்கள் சாதனை |
Jul 17, 2025

இலங்கை கிரிக்கெட் வீரர் ஷெஹான் மதுசங்க கைது

Posted on May 28, 2025 by Admin | 95 Views

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷெஹான் மதுசங்க, ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று (மே 28) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் அவரை முன்னிலைப்படுத்தியபோது, நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

ஏற்கனவே, 2020ஆம் ஆண்டு இதே போன்ற குற்றச்சாட்டில் ஷெஹான் மதுசங்க கைது செய்யப்பட்டதுடன், அவருக்கு இலங்கை கிரிக்கெட் சபை போட்டித் தடை விதித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.