கெபத்திக்கொல்லா பொலிஸ் பிரிவில் உள்ள குருலுகமவைச் சேர்ந்த 36 வயது மனைவி, தனது கணவரை கோடரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், குறித்த பெண் தனது மூன்று குழந்தைகளுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் குருலுகம, உக்குவவைச் சேர்ந்த 46 வயதான உபாலி ஹேரத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முன்னதாக தம்பதியருக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், கணவன் மனைவியை வாளால் தாக்க முயன்றதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கோபமடைந்த மனைவி கோடரியால் கணவனின் தலையில் தாக்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கெபத்திக்கொல்லா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.