இன்று (செப்டம்பர் 8) முதல் போக்குவரத்து சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இதை முன்னிட்டு, நாடு முழுவதும் காவல்துறையினர் சிறப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள், நிறம் மாற்றப்பட்ட வாகனங்கள், கூடுதல் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், மேலும் வாகனங்களின் முன் மற்றும் பின்புறங்களில் சித்திர வடிவமைப்புகள் அல்லது விளம்பரங்கள் ஒட்டியிருப்பது ஆகியவை சோதனைக்கு உட்படுத்தப்படும்.
அதிக சத்தம் உண்டாக்கும் ஒலிப்பான் மற்றும் சட்டவிரோத சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பிலும் பொலிசாருக்கு இன்று முதல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.