Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 வருடங்களும் நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருடங்களும் கடூழிய சிறை தண்டனை

Posted on May 29, 2025 by Admin | 259 Views

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் காலத்தில் இடம்பெற்ற பொருளாதார மோசடி தொடர்பான வழக்கில், முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோ குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவர் கொண்ட நீதிபதிகள் குழு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, மகிந்தானந்த அளுத்கமகேவுக்கு 20 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும், நளின் ருவான்ஜீவ பெர்னாண்டோவுக்கு 25 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

சதொச நிறுவனத்தின் பெயரில், 14,000 கரம் போர்ட்கள் மற்றும் 11,000 தாம் போர்ட்கள் என இரு வகையான பொருட்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ. 53 மில்லியன் நட்டம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் இறுதிகட்டத்தில் நீதிமன்றம், அரச நிதி மோசடி உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவுக்கப்படுகிறது.

இந்த தீர்ப்பு, பொதுமக்களின் நிதியை கையாளும் பொது அதிகாரிகள் , அரசியல்வாதிகள் மீது கண்காணிப்பு மற்றும் சட்டத்தின் முழு கடுமையும் மேற்கொள்ளப்படுவதை மீண்டும் நினைவூட்டுகிறது.