கொழும்பு புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் புதுப்பித்தல் நடவடிக்கைகள் இன்று (15) காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகின்றன.
1964ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்நிலையம், 60 ஆண்டுகளுக்குப் பின் முழுமையான மேம்பாட்டை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்க அம்சமாகும். புதுப்பிப்பிற்காக 424 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
புதுப்பிப்பு திட்டத்தின் கீழ், பயணிகள் நலனுக்காக புதிய ஓய்வு அறைகள், தகவல் தொடர்பு நிலையங்கள், பாதுகாப்பு அமைப்புகள் உள்ளிட்ட பல வசதிகள் சேர்க்கப்படவுள்ளன. இந்த பணிகள் இலங்கை விமானப்படையின் பொறுப்பில் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்கிடையில், “க்ளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ் மருதானை ரயில் நிலையத்தின் புதுப்பிப்பு பணிகளும் இன்று தொடங்குகின்றன. வரலாற்று சிறப்புமிக்க இந்நிலையத்தின் பழமைத்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டு, அதனைப் புதுப்பிக்கும் வகையில் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்