(அக்கறைப்பற்று செய்தியாளர்)
அக்கரைப்பற்று மாநகர சபையின் “மறுமலர்ச்சி நகரம்” உள்ளுராட்சி வார நிகழ்வு 2025 செப்டம்பர் 15ஆம் திகதி திங்கட்கிழமை இன்று காலை 10.00 மணிக்கு மாநகர அதாஉல்லா அரங்கில் மாநகர முதல்வர் கெளரவ ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையில் ஆரம்பமானது.
இந்த நிகழ்வின் போது, பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் கையேற்றப்பட்டு, அவற்றை முதல்வர் நேரடியாக பரிசீலித்து உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டன.
மேலும், பிரதேச செயலகம், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், நீர் வழங்கல் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் தங்கள் சேவைகளை பொதுமக்களுக்காக வழங்கி வருகின்றன. மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இச்சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.