(இறக்காமம் செய்தியாளர்)
“மறுமலர்ச்சி நகரம்” எனும் தொனிப்பொருளுடன் உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு இறக்காமம் பிரதேச சபையில் நடமாடும் சேவை முகாம் இன்று (15.09.2025) கௌரவ தவிசாளர் எம். முஸ்மி அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளருமான எம். எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினரும் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு மன்ஜுல ரத்னாயக்க, இறக்காமம் பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் எம்.ஐ.எம். பாயிஸ், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஸ்ஸான் உள்ளிட்ட திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பெருமளவிலான பொதுமக்களும் பங்கேற்றனர்.
இவ்வாறு, உள்ளூராட்சி வாரத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இந்த சேவை முகாம் பொதுமக்களின் தேவைகளுக்கான சேவைகளை நேரடியாக வழங்குவதால் சிறப்பம்சமுடையதாக அமைந்தது.