இலங்கை மின்சார சபையை நான்கு தனித்தனியான கம்பனிகளாக பிரிக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபை ஊழியர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக சுமார் 21,800 ஊழியர்கள் இன்றும் நாளையும் (இரண்டு நாட்கள்) சுகயீன விடுப்பில் செல்லவுள்ளனர். போராட்டம் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ளது என தொழிற்சங்கத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
ஊழியர்கள் தமது எதிர்ப்பை வலுப்படுத்தும் வகையில் சுகயீன விடுப்பு போராட்டத்துக்கு அடுத்த கட்டமாக ஆர்ப்பாட்டங்களையும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.