Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

ட்ரம்ப் அறிவித்த சர்வதேச வரி திட்டம் மீண்டும் உடனடி அமலுக்கு வருகிறது

Posted on May 30, 2025 by Admin | 193 Views

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த சர்வதேச வரி திட்டம் மீண்டும் உடனடி அமலுக்கு வருகிறது. அமெரிக்காவின் மேன்முறையீட்டு நீதிமன்றம், உலக நாடுகளுக்கு விதிக்கப்பட்ட இந்த தீர்வை வரியை தற்காலிகமாக வசூலிக்க அனுமதி வழங்கியுள்ளது.

சமீபத்தில், ட்ரம்ப் பெருமளவிலான சர்வதேச வரி கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தார். இதை எதிர்த்து அமெரிக்காவின் சில மாநில நிர்வாகங்கள் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் வழக்கு தொடர, அந் நீதிமன்றம் “வரியை விதிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை, அது அமெரிக்க காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது” என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ட்ரம்ப் நிர்வாகம் மேன்முறையீடு செய்தது. அதன் அடிப்படையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்வு வரியை தற்காலிகமாக அமல்படுத்தலாம் என அனுமதித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வரும் மாதம் வழக்கில் உள்ள இரு தரப்பும் தங்களது ஆதாரங்களை எழுத்து வடிவில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.