Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிக்க இன்று இறுதி நாள் – தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை

Posted on May 30, 2025 by Admin | 171 Views

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்குப் பிறகு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை அறிவிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் முடிவடைகிறது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 21 நாட்களில் இந்த பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பது விதிமுறை. எனினும், இந்நிலை வரை பல அரசியல் கட்சிகளும் சுயேச்சை குழுக்களும் தங்களது உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்காத நிலையில் உள்ளன.

கால அவகாசம் மேலும் நீடிக்கப்படமாட்டாது எனவும், கட்சிகள் அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்பதையும், தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ. ஏல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.