ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 11ஆவது ஆட்டம் இன்று இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதலுடன் நடைபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களைப் பெற்றது. அணிக்காக மொஹமட் நபி சிறப்பாக விளையாடி 60 ஓட்டங்களை எடுத்தார். அவருக்கு துணையாக ரஷீத் கான் மற்றும் இப்ராஹிம் சத்ரான் தலா 24 ஓட்டங்களைச் சேர்த்தனர்.
அடுத்து 170 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 171 ஓட்டங்களை எட்டியது. இதன் மூலம் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது.