கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் இருந்து 16 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகள் நடத்திய விசாரணையில், 16.84 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் வகை போதைப்பொருள் பொதிகள் அங்கிருந்து மீட்கப்பட்டன.
கழிப்பறையை சுத்தம் செய்ய சென்ற பணியாளர், அங்கு சந்தேகத்திற்கிடமான பொதிகளை கண்டுபிடித்து உடனடியாக சுங்கத் துறை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவிற்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தலுக்கு தொடர்புடைய நபர்களைக் கண்டறிய விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.