Top News
| தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு | | ஐந்து புதிய அரசியல் கட்சிகளுக்கு அனுமதி | | பொத்துவில் முச்சக்கர வண்டி தரிப்பிட ஒழுங்குமுறை குறித்து ஆலோசனை  |
Jan 22, 2026

சமூக சேவையாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு மூதூரில் பெருமை சேர்த்த கௌரவிப்பு

Posted on September 22, 2025 by Admin | 202 Views

(அபூ உமர்)

வருடந்தோறும் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த திறமையாளர்கள் மற்றும் சமூக சேவையாளர்களை கௌரவிக்கும் மாபெரும் விழா மூதூர் அனர்த்த சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் 21.09.2025ம் திகதி மூதூர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இவ்விழா மூதூர் பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரியும், சமூக சேவைகள் நலன்புரிச் சங்கத் தலைவருமான மூதூர் முஸ்லிம் விவாக பதிவாளர் எம்.வை. லாபீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, சட்டத்தரணி எம்.ஏ.எம். முஜீப், மூதூர் பிரதேச சபை தவிசாளர் செல்வரத்திணம், கின்னியா பிரதேச சபை தவிசாளர் ஏ.ஆர்.எம். அஸ்மி, மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல். சிறாஜ், கின்னியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம். கணி உள்ளிட்ட பல்வேறு அரச, சமூக மற்றும் கல்வித் துறையினரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் 9A சித்தி பெற்ற 200 மாணவர்கள், அல் குர்ஆனை மனனம் செய்த 100 ஹாபிழ் மாணவர்கள், 2025 தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் வெற்றி பெற்ற மாணவர்கள்
அதோடு பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், 30க்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.