(அபூ உமர்)
கிழக்கு மாகாணத்தில் பணியாற்றும் தொண்டர் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (22.09.2025) முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.
இச்சந்திப்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை மற்றும் கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பிரச்சினைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் திரு. கே. குணனாதன், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி எஸ்.ஆர். ஹஸந்தி மற்றும் கிழக்கு மாகாண பொது நிர்வாக பிரதிப் பிரதம செயலாளர் திரு. என். வில்வரத்னம் ஆகியோரை சந்தித்து தொண்டர் ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், நிரந்தர நியமனம் உள்ளிட்ட சேவை தொடர்பான தேவைகள் குறித்து விரிவாக கலந்துரையாடினர்.