Top News
| சுற்றுலாப் பணியக நிதி மோசடி: முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்ய பிடியாணை | | மு.கா.வின் 40ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ‘லீடர் அஷ்ரப் கிண்ண’ மென்பந்து கிரிக்கெட் சமர் | | மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதி |
Oct 15, 2026

எதிர்க்கட்சிகள் போதைப்பொருள் விநியோகத்துடன் தொடர்புடையவர்களாயின் முழுப் பெயர்கள் வெளியிட கோரிக்கை

Posted on May 14, 2025 by Admin | 288 Views

போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட வேண்டும். தேர்தல் பிரசார காலத்தில் எதிர்க்கட்சிகள் ‘குடு’ உள்ளிட்ட போதைப்பொருட்களை தங்கள் ஆதரவாளர்களிடம் விநியோகித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

“தேர்தலை ஒரு பக்கம் வையுங்கள். ஆனால் அமைச்சர் சத்துரங்க அபேசிங்க வைத்திருக்கும் குற்றச்சாட்டு மிகச் பாரதூரமானது. இந்த குற்றச்சாட்டை தீர்மானிக்க, அவர் குறிப்பிடும் எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் முழுப் பெயர் விபரங்களை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு சமர்ப்பிக்க வேண்டும்” என மனோ கணேசன் தெரிவித்தார்.