Top News
| 82 மருந்தகங்களின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தம் | | பொத்துவில், உகன கல்வி வலயங்களுக்கு விரைவில் அங்கீகாரம் வழங்கப்படும் என பிரதமர் உறுதி | | தாய்லாந்தில் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல் |
Jul 26, 2025

சீரற்ற காலநிலை காரணமாக 29,000க்கும் மேற்பட்ட மின்வெட்டு பதிவு

Posted on May 30, 2025 by Hafees | 76 Views

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதுவரை 29,015 மின்தடை தொடர்பான முறைப்பாடுகள் பெறப்பட்டுள்ளதாகவும், மின்விநியோக சேவையில் ஏற்பட்டுள்ள இடையீடுகளை சரிசெய்யும் பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்பட்டிருந்தால், பொதுமக்கள் 1987 என்ற அவசர இலக்கத்திற்கும், அல்லது “CEBCare” என்ற செயலியின் மூலமாகவும் தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் மின்சார சபை அறிவுறுத்தியுள்ளது.