Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

மத்துகம பிரதேச சபை உறுப்பினர்களுக்கு ரூ.8 மில்லியன் வழங்க NPP முயற்சி – கசுன் முனசிங்க அதிர்ச்சி வெளியீடு

Posted on May 30, 2025 by Admin | 215 Views

மத்துகம பிரதேச சபையின் சுயேட்சை உறுப்பினர்களுக்கு, தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சி ரூ.8 மில்லியன் பணத்தை வழங்க முயற்சித்ததாக பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

சுயேட்சை குழுவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கசுன் முனசிங்க, சமீபத்தில் நடந்த ஊடக சந்திப்பில் பேசினார். அவர் கூறுகையில், NPP சார்பாக அமைச்சர் ஒருவர் நேரடியாக தனது இல்லத்திற்கு வந்து ஆதரவைக் கோரியதாகவும், அதற்கு பின் இரண்டாவது சந்திப்பு கொழும்பில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.

“பணத்தின் மீது ஆசை கொண்டிருந்தால், நாம் இதற்கான முடிவுகளை ஏற்கனவே எடுத்திருப்போம். நாங்கள் மக்கள் நலனுக்காகவே செயற்படுகிறோம்,” என கசுன் முனசிங்க தெளிவுபடுத்தினார்.

இதேவேளை, மத்துகம பிரதேச சபையின் புதிய தலைவராக கசுன் முனசிங்க நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.