Top News
| முன்னாள் அமைச்சர் தயாரத்னவின் மறைவுக்கு உதுமாலெப்பை எம்பி அனுதாபம் தெரிவிப்பு | | சிராஜுதீனின் மறைவுக்கு ரிஷாட் பதியுதீன் எம்பி அனுதாபம்- “அவரது நற்பணிகளை கட்சி என்றும் மறக்காது” | | போதைப்பொருளை பொம்மைக்குள் மறைத்து கடத்திய 29 வயது பெண் கைது |
Jul 26, 2025

பெரியநீலாவணையில் 37 வயது பெண் வெட்டிக் கொடூரக் கொலை

Posted on May 30, 2025 by Admin | 130 Views

அம்பாறை மாவட்டம் கல்முனை, பெரியநீலாவணையில் இன்று (மே 30) காலை பெண்ணொருவரின் சடலம் வெட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

37 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான இவர், கடுமையான தாக்குதலுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டதாக பெரியநீலாவணை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளில், அவர் கழுத்து மற்றும் தலையில் பலத்த வெட்டுக்காயங்களுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மரணமடைந்தவரின் கணவர், மத்திய கிழக்கு நாடொன்றில் வேலைபுரிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பவம் தொடர்பாக, பெரியநீலாவணை காவல்துறையினர் மற்றும் அம்பாறை தடயவியல் பிரிவினர் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.