(பாலமுனை செய்தியாளர்)
பாலமுனை ஹில்ப் சமூக சேவை மன்றத்தின் ஏற்பாட்டில் மறுமையின் மேன்மையாளர்கள் கௌரவிப்பு விழா கடந்த 20.09.2025 அன்று ஹைமா பள்ளிவாசலுக்கு அருகில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி, ஹில்ப் சமூக சேவை மன்றத் தலைவர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம். ஜெ. முஹம்மது றிஸ்வான் JP அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
இவ்விழாவிற்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜனாப் ஏ.சி. அகமட் அப்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர் எம்.எப்.எம். பர்ஹான் விஷேட அதிதியாகவும் கண்ணியமிக்க உலமாக்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், செயலாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் உள்ளிட்ட பலரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.சி. அகமட் அப்கர் அவர்களுக்கு ஹில்ப் சமூக சேவை அமைப்பினால் பாராட்டுச் சின்னம் வழங்கப்பட்டது. மேலும் பள்ளிவாசல்களில் பணியாற்றிய மற்றும் பணியாற்றி வரும் 55 முஅத்தின்மார்கள், பணியாளர்கள் மற்றும் மூன்று மூத்த உலமாக்களுக்கு நினைவுச் சின்னங்களும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.