Top News
| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
Oct 6, 2025

புதிய வாகன இலக்கத் தகடுகள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் இன்று வெளியிட்ட அறிவிப்பு

Posted on September 26, 2025 by Admin | 123 Views

புதிய பாதுகாப்பு அம்சங்களும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய வாகன இலக்கத் தகடுகள் வரும் நவம்பர் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (26) நாடாளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கு பதில் அளித்தபோது அவர் இதனை அறிவித்தார்.

தற்போது பெருமளவிலான வாகனங்கள் இலக்கத் தகடுகள் இன்றி இயக்கப்படுவதாகவும், முந்தைய நிறுவனங்களின் அரசியல் தலையீடு, ஊழல் மற்றும் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக மோட்டார் வாகனத் திணைக்களம் கடந்த பத்து ஆண்டுகளாக முன்னேற்றம் காணவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிய சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் தயாரிக்கப்படவுள்ளதாகவும், இலக்கத் தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.