நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 80வது பொதுச்சபை அமர்வில் கலந்துகொண்ட உலக தலைவர்களுக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விசேட விருந்தொன்றை ஏற்பாடு செய்தார்.
இந் நிகழ்வில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் பங்கேற்று அமெரிக்க ஜனாதிபதியுடன் சுமுகமான உரையாடலில் ஈடுபட்டதாகத் தமது எக்ஸ் (X) சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது ஜப்பான் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.