அட்டாளைச்சேனை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஒலுவில் பகுதியில் இன்று காலை (28) இதயத்தை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளம் பெண் குழந்தையானது ஒலுவில் களியோடை ஆற்றின் கரையில் இனம் தெரியாத நபரால் கைவிடப்பட்ட நிலையில் மீன் பிடிக்க சென்ற ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்மீனவர் உடனடியாக குழந்தையை மீட்டு ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து குழந்தை மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் மருத்துவர்களின் பராமரிப்பில் தற்போது குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இக்குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அனைவரையும் ஆழமாக நெகிழச் செய்துள்ளது.