Top News
| மேல் மாகாணத்தில் போக்குவரத்து அபராதங்களை இனி மொபைல் செயலியில் செலுத்தலாம் | | மூடிய கணக்கிலிருந்து காசோலை வழங்குபவர்களை நோக்கி பாய்கிறது புதிய சட்டம் | | ஜனாதிபதிக்கு உச்ச பாதுகாப்பு அவசியம்- அமைச்சர் லால்காந்த் |
Jul 28, 2025

அஞ்சல் அதிகாரிகள் வேலைநிறுத்தம் முடிந்தது – தீர்வு இல்லையெனில் மீண்டும் போராட்டம்

Posted on May 30, 2025 by Admin | 107 Views

அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் முன்னெடுத்திருந்த 48 மணிநேர அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (மே 30) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.

இந்த பணிப்புறக்கணிப்பின் காரணமாக சுமார் ரூ.70 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சில தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தாலும், அது உண்மைக்கு புறம்பானதாகும் என அஞ்சல்மா அதிபர் பி. சத்குமார தெரிவித்தார்.

“அதிகாரப்பூர்வ தரவுகள் இல்லாமல் கூறப்படும் இத்தகைய கணக்கீடுகள் தவறானவை,” என்று அவர் கூறினார்.

இந்த பணிப்புறக்கணிப்பின் பின்புலமாக, அதிகாரிகள் சங்கம் தங்கள் 10 அம்ச கோரிக்கைகளை அடங்கிய ஆவணத்தை இன்று சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சங்கத்தின் தரப்பில், கோரிக்கைகளுக்கு முறையான தீர்வு வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் போராட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.