யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கோட்டை பொலிஸார் இன்று (29) கைது செய்ததுடன் நீதிமன்றம் அவரை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
இன்று காலை விசாரணைக்காக கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தின் போது கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகே வாகனத்தை விதிமுறைக்கு முரணாக நிறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அந்நேரத்தில் போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக சுட்டிக்காட்டிய பொலிஸ் அதிகாரியுடன் பாராளுமன்ற உறுப்பினர் வாய்த்தகராறு செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைக்காக இன்று அழைக்கப்பட்டிருந்த போது அவர் கோட்டை பொலிஸ் நிலையத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.