| 50 வருடங்களில் முதல்முறையாக தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு | | நாட்டின் பல பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை , மின்னல் ,கடும் காற்றுக்கான ஆபத்து | | அட்டாளைச்சேனை பிரதேச சபையில் சில உறுப்பினர்களின் செயலற்ற தன்மை குறித்து மக்கள் மத்தியில் அதிருப்தி |
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில் 2025.09.29ம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் அட்டாளைச்சேனை பிரதேச எல்லைக்குள் இயங்கும் சகல தனியார் வகுப்புகள் (பிரத்தியேக கல்வி நிலையங்கள்) தொடர்பாக பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டன.
இந்த தீர்மானங்கள் வரும் 01.10.2025 முதல் அமுலுக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:
சீருடை கட்டாயம் – தரம் 09க்கு மேல் பிரத்தியேக வகுப்புகளுக்கு செல்வோர் கட்டாயம் பாடசாலை சீருடையில் பங்கேற்க வேண்டும். ஆண் மாணவர்கள் வெள்ளை சேட், பெண் மாணவிகள் தங்களின் பாடசாலை சீருடையை அணிந்து வர வேண்டும்.
GCE O/L வகுப்புகள் – மாலை 7.00 மணிக்குப் பிறகு நடத்தத் தடை.
GCE A/L வகுப்புகள் – இரவு 8.00 மணி வரை நடத்த அனுமதி.
பரீட்சைக்கு தோற்ற மாணவர்கள் – ஜூன் மாதத்திற்குப் பின் GCE O/L மற்றும் A/L மாணவர்களுக்கு இரவு 8.30 மணி வரை வகுப்புகள் நடத்த அனுமதி.
கட்டண விதிமுறை – தரம் 06 முதல் 09 வரை ஒரு மணித்தியாலத்துக்கு 50 ரூபா, தரம் 10 முதல் GCE O/L வரை ஒரு மணித்தியாலத்துக்கு 70 ரூபா.
மாணவிகளிடம் சேட்டைகள் – பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் மாணவிகளிடம் தவறான நடத்தை காட்டும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபை உறுப்பினர்கள் ஏ.எல். பாயிஸ், எம்.எல். ரினோஸ், எஸ். பாஹிமா உள்ளிட்டோர் மற்றும் பிரதேசத்தில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களின் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.