(அபூ உமர்)
அம்பாறை மாவட்ட நாவிதன்வெளி பிரதேசத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்காக பிரதேச செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (14.05.2025) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை பிரதேச செயலாளர் திருமதி ஆர். ராகுலநாயகி ஏற்பாடு செய்திருந்தார்.
இக்கூட்டத்துக்கு தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஏ. ஆதம்பாவா தலைமை வகித்ததுடன் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களும் கலந்து கொண்டார்.
பிரதேச சபை செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம சேவை மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் மேலும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் போது சமூக வசதிகள், சுகாதார சேவைகள், பாதுகாப்பு நிலைமை, மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி உள்ளிட்ட முக்கிய விடயங்கள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காணும் முயற்சிகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய பரிந்துரைகளும் முன்வைக்கப்பட்டன