பாடசாலைகளில் பணியாற்றி வரும் அபிவிருத்தி அதிகாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவின் கையொப்பத்துடன் வெளியிட்டுள்ளது.
கல்வி அமைச்சு வெளியிட்ட தகவலின்படி, 2023 மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னதாக நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த பாடசாலை அபிவிருத்தி அதிகாரிகள் ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யும் போட்டி தொடர்பான வழக்குகள் தற்போது உயர் நீதிமன்றத்தில் தீர்வுக்குக் கிடைத்துள்ளன.
ஆனால், இன்னும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ள வழக்குகள் முடிவடையாத நிலையில் உள்ளதால், அவற்றிற்கான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்னரே இப்பரீட்சை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது.