நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றைய வானிலை முன்னறிவிப்பில், பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு பெரும்பாலான மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 50 மில்லிமீட்டருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படும் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் அபாயங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.