(எம்.ஜே.எம். சஜீத்)
அட்டாளைச்சேனை தேசிய கல்விக்கல்லூரியின் விஷேட கல்விப் பிரிவின் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிலுநர்களால் தொகுக்கப்பட்ட ‘மாற்று விழி’ சஞ்சிகை வெளியீட்டு விழா 2025 அக்டோபர் 2ஆம் திகதி கல்லூரி ஆராதணை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விரிவுரையாளர் அபூபக்கர் நளீம் தலைமையில் இடம்பெற்ற இத்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்லூரி பீடாதிபதி எம்.சி. ஜூனைட் கலந்து கொண்டு சஞ்சிகையை வெளியிட்டார்.
சஞ்சிகை விமர்சனத்தை முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளர் (முறைசாரக் கல்வி) எம்.எல். முஹம்மட் லாபிர் நிகழ்த்தினார் மற்றும் கல்லூரியின் நிர்வாக உப பீடாதிபதி எம்.ஐ. ஜஃபர், கல்வி உப பீடாதிபதி ஏ.ஜி. அஹமட் நழீர், பதிவாளர் எச்.எம்.ஏ. ஹசன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவில் விரிவுரை இணைப்பாளர்கள், பீடத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பலரும் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.