அநுராதபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அரசாங்கம் “அஸ்வெசும” நலன்புரித் திட்டத்தை விரைவில் ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.
அவர் உரையாற்றியபோது, “மக்களின் வறுமையைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்படும் அஸ்வெசும திட்டம், அதன் உண்மையான இலக்கை அடைய முடியாமல் போயுள்ளது.
மேலும், ஒரு சமூகப் பாதுகாப்பு திட்டம் வெற்றியடைய வேண்டுமெனில், அது வறுமை ஒழிப்பு, முதலீட்டு ஊக்குவிப்பு, சேமிப்பு வளர்ச்சி, உற்பத்தி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி முன்னேற்றம் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.