Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியில் முழுநேர உஸ்தாத் பணியிட வாய்ப்பு

Posted on October 5, 2025 by Admin | 327 Views

(அட்டாளைச்சேனை செய்தியாளர்)

அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி (East Ceylon Arabic College) தனது ஷரீஆ பிரிவிற்கான முழுநேர உஸ்தாத் ஒருவரை ஆட்சேர்க்க அறிவித்துள்ளது.

இது மதப்பணியில் ஈடுபட விரும்பும் தகுதியும் அர்ப்பணிப்பும் கொண்டவர்களுக்கு சிறந்ததொரு வாய்ப்பாக கருதப்படுகிறது.

தேவைப்படும் தகைமைகள்:

  1. ஆலிம் பட்டம் பெற்றவர் ஆக இருக்க வேண்டும்.
  2. ஷரீஆ துறையின் முக்கிய பாடப்பிரிவுகளில் தர்க்கவியல் – Logic(இல்முல் மன்திக்),அறிவியல் – Rhetoric (இல்முல் பலாகா) , வானியல் – Astronomy(இல்முல் பலக் ) போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  3. கற்பித்தல் அனுபவமும் ஆற்றலும் கொண்டவராக இருக்க வேண்டும்.
  4. முழுநேர பணியில் ஈடுபடத் தயாராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடையவர்கள் தமது கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ்கள், தொடர்பு விபரங்கள் அடங்கிய (CV)யை 2025 அக்டோபர் 10க்குள் அனுப்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

விவரங்களுக்கு:

  • 077 917 7954 (வாட்ஸ்அப் வழியாகவும் அனுப்பலாம்)
  • அதிபர்: 077 237 4014

நேர்முகப் பரீட்சை:

  • திகதி: 11.10.2025 (சனிக்கிழமை)
  • நேரம்: காலை 9.00 மணி

இவ்வாய்ப்பை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி பணிப்பாளர் சபை சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.