(அட்டாளைச்சேனை செய்தியாளர்)
அட்டாளைச்சேனை House of English கல்வி நிறுவனத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த 04ஆம் திகதி (2025.10.04) அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வு நிறுவனத்தின் பணிப்பாளர் ஏ.ரி. நகீல் அவர்களின் தலைமையில் அட்டாளைச்சேனை கிளையின் பிரதிப் பணிப்பாளர் எம்.எஸ். ஜெனீஸ், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது.
போட்டியில் மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பெற்றோர்கள் மற்றும் பார்வையாளர்களும் கலந்து கொண்டு போட்டியாளர்களை ஊக்குவித்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளரும், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், எஸ்.எல். தாஜுதீன் (Rtd.DSO), எம்.ஏ. அன்சார் (முன்னாள் அதிபர்), அதிபர்களான ஏ.எல். பாயிஸ், ஏ.எம். அஸ்மி, ஓ.எல்.எம். ரிஸ்வான், எம்.எஸ்.எம். பாஹிம், எம்.எச். சர்மி (MLT), சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் எஸ். சியாத், ஹஸ்பியா பீவி ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன




