(ஒலுவில் செய்தியாளர்)
பொத்துவில் பிரதேச செயலகத்துக்கு புதிய நிரந்தர கணக்காளராக ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த செல்வி எஸ். பாத்திமா சபானா நியமிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமத் நஸீல் தலைமையில் 07.10.2025ம் திகதி பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் புதிய கணக்காளர் வாழ்த்தி வரவேற்கப்பட்டதுடன், அவருக்கான சிறப்பு வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.
செல்வி பாத்திமா சபானா இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றவராகும். மேலும், இலங்கை கணக்காளர் சேவைத் தேர்வில் வெற்றி பெற்று ஒலுவிலில் சித்தியடைந்த முதல் பெண்மணி என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
அவரது நியமனம் பொத்துவில் பிரதேச செயலகத்தின் நிர்வாகத் துறைக்கு புதிய உந்துசக்தியாக அமையும் எனக் கருதப்படுகிறது.