(குரு சிஷ்யன்)
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான முஸ்லிம் கலாசாரப் போட்டி 2025.10.06ம் திகதி திங்கட் கிழமையன்று மூதூர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. இப்போட்டியில் கிழக்கு மாகாணத்திலுள்ள பல பாடசாலைகளின் மாணவர்கள் போட்டியில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
அக்கரைப்பற்று கல்வி வலயத்தை சேர்ந்த அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் ஏ.ஆர்.அப்துல் முஹைமீன் எனும் மாணவன் கிராத் போட்டியில் கலந்து கொண்டு மாகான மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்றுள்ளார் . இச்சிறப்பான சாதனை பாடசாலைக்கும் அட்டாளைச்சேனை ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளது.
இப்போட்டிற்காக மாணவனை வழிநடத்திய ஆசிரியர்கள், பாடசாலையின் அதிபர் ஏ.எல்.எம்.பாயிஸ், பிரதி அதிபர்கள், இஸ்லாம் பாட ஆசிரிய ஆலோசகர் மெளலவி என்.ரி.நசீர்(ஹாமி), வலயத்தலைவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.