(பாலமுனை செய்தியாளர்)
ஊடகத்துறை, கல்வி, சுகாதாரம், அரசியல், கலாசாரம் உள்ளிட்ட பல துறைகளில் சிறப்பாக பணியாற்றும் நபர்கள் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்ட நிகழ்வானது 2025.10.11ம் திகதி சிலோன் ஜேர்னலிஸ்ட் போரத்தின் தலைவர் எம்.எஸ்.ஜஃபர் தலைமையில் அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், சமூக நலன், கல்வி மேம்பாடு மற்றும் சுகாதார முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் பலர் இந்நிகழ்வில் சிறப்பு கௌரவங்களை பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாட் பதியுதின் அவர்களிடமிருந்து பெற்றனர்.
சுகாதார மற்றும் சமூகப் பணிகளில் முக்கிய பங்களிப்பு செய்ததற்காக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர், டொக்டர் ரீ.எஸ்.ஆர். ரஜாப், டொக்டர் உவைஸ் பாறுக், அட்டாளைச்சேனை மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர்கள் ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் எம்.ஏ. ராசிக் ஆகியோரும் பாராட்டுப் பரிசுகளைப் பெற்றனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட விருந்தினர்கள், ஊடகத்துறை மற்றும் சமூக முன்னேற்றம் ஒன்றோடொன்று தொடர்புடையவை என வலியுறுத்தியதோடு சமூக நலனுக்காக இணைந்து செயல்பட அனைவரையும் அழைத்துக் கொண்டனர்.



