Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

பாத்திமா நளீராவின் “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு 

Posted on October 13, 2025 by Admin | 227 Views

சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பரின் மனைவி பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” எனும் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மூத்த பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டதுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் நூலை நயந்து உரையாற்றினார்.

அதிதிகளாக உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ. எச். எம். டி. நவாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர், உலக அறிவிப்பாளர் பீ. எச். அப்துல் ஹமீத், ஜே பவுண்டேசன் நிறுவனரும் பணிப்பாளருமான கலாநிதி அல்ஹாஜ் ஐ. வை. எம். ஹனீப், சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்தீக் காரியப்பர், மொஹமட் ஷிபான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பெருமளவில் பங்கேற்று, கவிஞர் பாத்திமா நளீராவிற்கு பாராட்டுகள் தெரிவித்தனர்.