காஸா பகுதியில் நடைமுறைக்கு வந்த அமைதி ஒப்பந்தத்தின் படி ஹமாஸ் அமைப்பு தங்களிடம் இருந்த 20 இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுதலை செய்துள்ளது.
இந்த பிணைக் கைதிகள் அனைவரும் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பின்னர் அவர்கள் பாதுகாப்பாக இஸ்ரேல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இதனுடன், ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.