இஸ்ரேலினால் கடத்திச் செல்லப்பட்டு நீண்டகால சிறைவாசம் அனுபவித்த பல்லாயிரக்கணக்கானோர் இன்று விடுதலையாக காஸாவுக்கு திரும்பியுள்ளனர். அவர்களை வரவேற்க கான்யூனூஸ் பகுதியில் மக்கள் பெருந்திரளாக கூடினர்.
இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் மொத்தம் சுமார் 1,966 பலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதேவேளை, ஹமாஸ் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உட்பட இன்னும் நூற்றுக்கணக்கானோர் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.