(அக்கரைப்பற்று செய்தியாளர்)
அக்கரைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் அவர்களின் ஏற்பாட்டில் அபிவிருத்திக் குழுத் தலைவர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இன்று (14.10.2025) அக்கரைப்பற்று பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.அப்துல் வாசித், அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் யூ.எல். உவைஸ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எம்.ஏ. ராசீக், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம் மற்றும் திணைக்களங்களின் தலைவர்களும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள், பொது சேவைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டன.

