இலங்கையில் வரும் ஒக்டோபர் 16 முதல் 28ஆம் திகதி வரை வடகிழக்கு பருவமழை தீவிரமடையவுள்ளதால், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தக் காலப்பகுதியில் சில பகுதிகளில் 250 மில்லிமீட்டருக்கும் மேற்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக மழைவீழ்ச்சியால் ஆறுகள் கரைபுரண்டு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயமும், தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும் சாத்தியம் உள்ளதாகவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனை முன்னிட்டு, அனைத்து திணைக்களங்களும் மற்றும் பொதுமக்களும் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, தேவையானபோது பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர தயாராக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.