நாட்டின் பல பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பதிவாகும் வாய்ப்பும் உள்ளதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
அத்துடன், மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சமயங்களில் மின்னல் தாக்கம் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படக்கூடியதால், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது