ஒரு நாள் பாடசாலைக்கு வராததால் கோபமடைந்த அதிபர் மாணவியை மரக் குச்சியால் தாக்கிய சம்பவம் ஆனமடுவ கல்வி வலயத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம், ஆனமடுவ கல்வி வலயத்திற்குட்பட்ட ஆரம்ப பாடசாலை ஒன்றில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கெடத்தேவ பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார்.
அந்த சிறுமி முந்தைய நாள் பாடசாலைக்கு வராததற்காக அதிபர் கோபமடைந்து அருகில் இருந்த மரக் குச்சியால் பலமுறை தாக்கியதாக பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்பவம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ஆனமடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ பிரேமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ. வன்னியாராச்சி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.