(பொத்துவில் செய்தியாளர்)
ஜனாதிபதியின் பணிப்பின் பேரில் அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பொத்துவில் பிரதேச மக்களுக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலாளர் M.A.C. அஹமத் நஷீல் தலைமையில் 2025 அக்டோபர் 15ஆம் திகதி பொத்துவில் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தலைமையில் மொத்தம் 106 பேருக்கு குடியிருப்பு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் M.S. அப்துல் வாஸித், தேசிய மக்கள் சக்தி பொத்துவில் பிரதேச அமைப்பாளர் ஆதம் சலீம், பிரதேச சபை உறுப்பினர்கள் மஹ்ரூப் மற்றும் புனிதன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பு செயலாளர் ஆரிப், மேலும் நிந்தவூர் பிரதேச தேசிய மக்கள் சக்தி செயற்பாட்டாளர்கள் சதாத், சஹாப்தீன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந் நடவடிக்கையானது பொத்துவில் மக்களின் நில உரிமை மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்க கூடியதாக அமைந்துள்ளது.


