Top News
| உயர்த்தப்பட்ட சம்பளம் ஆசிரியர்களின் வங்கி கணக்குகளில் இன்று வரவு | | குளிர் வானிலை காரணமாக வைரஸ் நோய்கள் பரவல் | | நாளை நடைபெறவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 7வது அமர்வு |
Jan 21, 2026

தைக்காநகர் மக்களின் கோரிக்கைகளை நேரில் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை

Posted on October 19, 2025 by Admin | 195 Views

(அபூ உமர்)

“கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” என்ற கருப்பொருளில் தைக்காநகர் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளை நேரடியாக மக்களிடம் கேட்டு தீர்வு காணும் வகையில் மக்கள் சந்திப்பு நிகழ்வு நேற்று (18.10.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் பிரதித் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. நஜீஹா முஸபீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை கௌரவ உறுப்பினர் எஸ்.ஐ. ரியாஸ், அஸ்-சஹ்ரா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அஜ்மல், அதிபர் ஏ.எல். யாசீன், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஏ. அன்சார் (Rtd.Pr), ஐ.எல். நசீர் (Ex.MPS), வேட்பாளர் ஏ.எல். நயீம், தொழிலதிபர் ஏ.கே. அமீர் மற்றும் தைக்காநகர் பிரதேச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தைக்காநகர் மக்களால் பின்வரும் விடயங்கள் முன்வைக்கப்பட்டன

  • அஸ்-சஹ்ரா வித்தியாலயம்: வகுப்பறை கட்டடங்கள், தளபாடங்கள், பாடசாலை விளையாட்டு மைதானம் ஆகியவற்றுக்கான அபிவிருத்தி.
  • தைக்காநகர் ஜும்மா பள்ளிவாசல்: அபிவிருத்தி மற்றும் சோலார் இணைப்பு.
  • வறுமைக்கோட்டினுள் வாழும் மக்கள்: தொழிற்சாலை அமைத்து வாழ்வாதார மேம்பாடு.
  • பொது நூல் நிலையம்: RDS கட்டத்தில் நிறுவல்.
  • பஸ் தரிப்பு நிலையங்கள்: அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் இரண்டு புதிய பஸ் தரிப்பு நிலையங்கள் அமைத்தல்.
  • கிராமிய வீதிகள்: வடிகான்கள் அமைத்தல் மற்றும் வெள்ள நீர் வடித்தோட்ட நடவடிக்கைகள்.
  • மீன் விற்பனை: பிரதான வீதியில் புதிய விற்பனை இடம் அமைத்தல்.
  • முகத்துவார பிரதேசம்: உல்லாசத்துறை இடமாக மாற்றும் ஏற்பாடுகள்.
  • மாடுகளறுக்கும் மடுவம்: மக்கள் வாழும் இடத்திலிருந்து அகற்ற நடவடிக்கைகள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர், அக்கரைப்பற்று மாநகர சபை மேயர், வலயக் கல்வி அலுவலக அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர் , ஏனைய தினைக்களத் தலைவர்கள் இணைந்து இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது