சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்களின் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அடையாளச் சின்னங்களை அகற்ற அரசாங்கம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இத்தகைய நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு எந்த நோக்கமும் இல்லை என்றும் அவர் இன்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சுகாதார அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.