கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது, நாட்டில் தங்கத்தின் விலை சுமார் ரூ.77,000 வரை குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, இன்று (23) மட்டும் ரூ.10,000 குறைவையும் பதிவு செய்துள்ளது.
இன்றைய (23) காலை நிலவரப்படி, கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.302,300 ஆக குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை இதே தங்கம் ரூ.379,200 ஆக விற்பனையாகியிருந்தது.
இதனுடன், 24 கரட் தங்கத்தின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று ரூ.330,000 ஆக சரிந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.