மேல்மாகாணம், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படிதெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேற்பட்ட அளவில் பலத்த மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளதாக திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கையில், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், மேற்கு, வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுடனும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.