பொய்யான WhatsApp குழு ஒன்றை பற்றிய எச்சரிக்கையை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
(Education Council to be formed through the New Education Reforms) என்ற பெயரில் இயங்கும் அந்த WhatsApp குழு, கல்வி வலயங்களிலுள்ள ஆசிரியர்களை ஒன்றிணைப்பதாகக் கூறி செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், இந்தக் குழுவுக்கு கல்வி அமைச்சுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லை என அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
அத்துடன், அந்தக் குழுவின் மூலம் பகிரப்படும் தகவல்கள் அல்லது மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கைகளுக்கும் அமைச்சு பொறுப்பேற்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அரசின் புதிய கல்வி மறுசீரமைப்புகளைப் பற்றி தவறான தகவல்கள் பரப்பும் இத்தகைய போலியான குழுக்களால் ஏமாறாமல் ஆசிரியர்களும் பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.